வெங்காயத்தாள்ல இதுக்கு முன்னாடி சமைச்சு இருக்கீங்களா...! சூப் செஞ்சு பாருங்க செம்மையா இருக்கும்...! - Seithipunal
Seithipunal


வெங்காயத்தாள் சூப். வெங்காய தாளில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது தெரியுமா ...உங்கள் குழந்தைகளுக்கு முக்கியமாக தேவை.
தேவையான பொருட்கள்:
பொருள்                                  - அளவு
வெங்காயத்தாள்                   அரை கப் (நறுக்கியது)
கேரட்                                       கால் கப் (நறுக்கியது)
முட்டை கோஸ்                       கால் கப் (நறுக்கியது)
பீன்ஸ்                                        கால் கப் (நறுக்கியது)
மிளகுத்தூள்                             அரை டீஸ்பூன்
சோளமாவு                             அரை டீஸ்பூன்
சோயா சாஸ்                          அரை டீஸ்பூன்
எண்ணெய்                            தேவைக்கேற்ப
உப்பு                                      தேவைக்கேற்ப


செய்முறை :
முதலில்,கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.வதக்கிய பின் காய்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் சோயாசாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.பிறகு சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் சூப் தயார்.இதை குழந்தைகளுக்கு குடுத்து பாருங்க ரசிச்சு சாப்பிடுவாங்க.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Have you ever cooked with onion leaves before Try making soup it will be delicious


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->