கரும்பு தின்ன கூலியா.? வேலையே செய்யாம சம்பாரிக்க கூடிய இந்த வேலைகளை பற்றி தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


சும்மா இருந்து கொண்டே சம்பளம் கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். நாட்டின் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக  பெருமளவு வேலையில்லா திண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலையை செய்யாமலே சில நிறுவனங்கள் லட்சக்கணக்கில் தங்களது பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன. அவை எந்த மாதிரியான வேலை அவற்றிற்கான சம்பளம் என்ன என்று பார்ப்போம்.

மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட்டுகளை சுவைத்து பரிசோதிப்பதற்கென்றே ஆட்களை வேலைக்கு வைத்து இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் சாக்லேட்டின் நிறம் சுவை மணம் ஆகியவற்றை பரிசோதிப்பதற்காக டெஸ்டர்கள் பணியமறுத்தப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு ஊதியமாக 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பு 25 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாய் வரை ஆகும்.

வாட்டர் ஸ்லைட் டெஸ்டர் என்ற வேலை  தண்ணீரில் டைவடித்து பரிசோதனை செய்வது. இந்த வேலைக்கு ஊதியமாக  முப்பதாயிரம் டாலர்களுக்கு மேல் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 25 லட்சத்திற்கு மேல் இருக்கும். இந்த வேலை  செயற்கை நீரூற்றுக்களில் இருக்கும் சரிவுகளை பரிசோதிப்பதும் நீரின் தரத்தை பரிசோதிப்பதுமாகும்.

ஆடம்பரமான மெத்தைகளில் படுத்துக்கொண்டே சம்பாதிக்க ஆசையா  அப்போது நீங்கள் சிமோன் ஹார்ன்  லிமிடெட் நிறுவனத்தில் சேரலாம். இது ஆடம்பர படுக்கைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அவர்கள் தயாரிக்கும் படுக்கைகளை அவற்றின் தரம் மற்றும் கம்போர்ட் லெவலை பரிசோதிப்பதற்காக பெட்டுகளில் படுத்து உறங்குவதற்கு என்றே பணியாட்களை வைத்திருக்கிறது. இவர்களுக்கு சம்பளமாக லட்சக்கணக்கில் வழங்கப்படுகிறது.

சீனாவில் தங்கள் நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக காட்டிக் கொள்ள அதிகாரிகளைப் போன்று உடை அணிந்து நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதற்கு என்றே பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் போலி நிர்வாகிகள் என்று அழைக்கப்படுகின்றனர். தங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காக இது போன்ற ஆட்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.இவர்களுக்கு வேலை என்று எதுவும் இல்லை.

பாண்டா கரடிகள் உலகில் அழகான உயிரினங்களில் ஒன்றாகும். சீனாவில் இவற்றை பராமரிப்பதற்கு என்றே ஆட்களை வேலைக்கு வைக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Five jobs that pay so much for you


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->