சாப்பிடும் முறையே செல்வத்தை தீர்மானிக்குமா? உணவு சாஸ்திரம் சொல்வது அதிர்ச்சி உண்மை...!
Does way you eat determine your wealth science food reveals shocking truth
சாப்பிடுதல் என்பது தினசரி செய்யும் ஒரு சாதாரண பழக்கம் அல்ல; அது நம் உயிரை தாங்கி நிற்கும் ஒரு புனித செயல். இன்று உடலுக்கு எவ்வளவு உணவு தேவைப்படுகிறதோ, அவ்வளவு மட்டும் உண்பதே இயற்கையின் சட்டம். நாளை அதே அளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஆகையால் “அளவான உணவு – ஆரோக்கியமான வாழ்வு” என்பதே நம் அடிப்படை மந்திரமாக இருக்க வேண்டும்.உணவை வெறும் வயிறு நிரப்பும் பொருளாக பார்க்காமல், அது நமக்கு உயிர் சக்தி தரும் பரிசு என்று நன்றியுடன் உண்பது முக்கியம். ஆன்மீக பார்வையில் பார்க்கும்போது, நாம் உண்ணும் உணவு மற்றொரு உயிரின் சக்தி. அது நம்முடன் ஒன்றி, நம்மாகவே மாறுகிறது. இந்த உணர்வுடன் உண்பதே உண்மையான ஆனந்தம்.

யோக கலாச்சாரத்தில் கூட உணவுக்கு தனி மரியாதை உண்டு. கால்களை மடக்கி அமைதியாக அமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி உண்பது சக்தி ஓட்டத்தை சீராக்கும் எனக் கூறப்படுகிறது. ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசை நோக்கி கால்களை நீட்டாமல் இருப்பதும் மரபு முறையாக பின்பற்றப்படுகிறது.உணவு சாப்பிடுவதற்கே சில சாஸ்திர முறைகள் உள்ளன. எப்போது சாப்பிட வேண்டும், எதை முதலில் பரிமாற வேண்டும், இலை எப்படி வைக்க வேண்டும் என அனைத்திற்கும் விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. முதலில் காய்கறி, அப்பளம் போன்றவை பரிமாறி, பின்னரே சாதம் வைக்க வேண்டும். எடுத்தவுடன் சாதம் வைப்பது நல்லதல்ல. அதுபோல வத்தல், கீரை போன்றவற்றையும் முதலில் வைக்கக் கூடாது. இந்த ஒழுங்குகள் குடும்பத்தில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி தரும் என நம்பப்படுகிறது.
திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதற்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.
கிழக்கு நோக்கி அமர்ந்தால் ஆயுள் வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்தால் பொருள் சேரும்.
தெற்கு நோக்கி அமர்ந்தால் புகழ் பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது.
பசி இருந்தால்தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பது நோய்களை வரவழைக்கும். சாப்பிடும் முன் கை, கால், வாய் சுத்தமாக கழுவி அமர வேண்டும். உணவின் மீது முழு கவனம் இருக்க வேண்டும். செல்போன், டி.வி., அல்லது வேறு வேலைகளுடன் சாப்பிடுவது உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்கும்.மேலும், வீட்டின் கதவை மூடி அமைதியான சூழலில் உண்பது நல்லது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது.உணவை மரியாதையுடன், ஒழுங்குடன், நன்றியுணர்வுடன் உண்போம். அப்போது அது வெறும் உணவாக அல்ல — நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ செழிப்பு தரும் வாழ்க்கை மருந்தாக மாறும்!
English Summary
Does way you eat determine your wealth science food reveals shocking truth