மீந்து போன உணவை அடுத்த நாள் சாப்பிடுறீங்களா.? அப்போ இது உங்களுக்கு தான்.! உஷார் தகவல்! - Seithipunal
Seithipunal


உணவு என்பது நம் ஆரோக்கியத்திற்கு  முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். நல்ல சத்தான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுவதன் மூலம்  நம் உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. உணவு உண்பதற்கென்று வழிமுறைகளும் இருக்கின்றன. மீதமான உணவை சூடு படுத்தி சாப்பிடுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

மீதமான உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவதன் மூலம் அதிலிருக்கும் உணவு கிருமிகள் அழிவதோடு உணவின் சுவையும் கூடுகிறது என்றாலும் அது நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக 24 மணி நேரங்களுக்கு முன்பு சமைத்த உணவை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சமைத்த உணவை 3 மணி நேரங்களுக்குள் சாப்பிட்டு விட வேண்டும் என ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது.

மீதமான உணவை சாப்பிடுவதன் மூலம் அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுவதாக தெரிவிக்கும் அவர்கள் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் குறைந்துவிடும் எனவும் தெரிவிக்கின்றனர். புதிதாக சமைக்கப்பட்ட உணவு பல வகைகளில் நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Demerits of eating Leftover food


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->