சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கருப்பு எள்.!
block Sesame for diabetes
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி, நடை பயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கருப்பு எள் மூலம் இந்த நோயை எப்படி குணப்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளிட்டவை அதிகமாக ஏற்படும் என்பதால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கருப்பு எள்ளை வாயில் போட்டு மென்று வர செரிமான பிரச்சனை குறையும்.
* சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு செரிமான மண்டலம் வேகமாக செயல்படாது. இதனால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். அப்படி உள்ளவர்கள் கருப்பு எள்ளை சாப்பிட்டு வரலாம்.
* இந்தக் கருப்பு எள்ளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால், இந்த எள்ளை சாப்பிட்டு வந்தால் உணவுகளின் மூலம் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
* இந்த எள்ளை சாப்பிடுவதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை சேர்கிறது.
இந்த கருப்பு எள்ளை தயிருடன் கலந்து சாப்பிடலாம். பெரும்பாலும் கருப்பு எள்ளை பச்சையாக அப்படியே உட்கொள்வது தான் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.
English Summary
block Sesame for diabetes