அடடா வாழை இலையில் இத்தனை நன்மைகளா?.. மருத்துவ குணங்கள் நிறைந்த வாழை இலை..! - Seithipunal
Seithipunal


விருந்து என்றால் உணவுகளுடன் வாழை இலையும் நினைவிற்கு வரும்.  வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரியம் மட்டுமில்லை. அதில் சில ஆரோக்கிய பயன்களும் உள்ளது. வாழையில் என்னென்ன  நன்மைகள் உள்ளது என பார்போம்.

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு கூந்தல் கருப்பாக இருக்க உதவும். மேலும், சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி வாழை இலையால் கட்டு கட்டி வர அவை குணமாகும்.

சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதால் எளிதில் குணமாகும் வாய்ப்பு உள்ளது.

சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை மருந்து போல தடவி கட்டி வைக்க வேண்டும்.கிருமிகளின் தாக்கத்தை குறைப்பதோடு ரணங்களை குணமாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banana leaf rich in medicinal properties


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->