Healthy வழியில உங்க குழந்தைக்கு உணவுகொடுக்கணுமா? அப்போ இந்த ''பருப்பு சூப்'' குடுங்க ...
Want feed your child healthy way drink this lentil soup
பருப்பு சூப்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
துவரம் பருப்பு - 4 கப்
விரும்பிய காய்கறி - ஒரு கப்
ரொட்டி துண்டுகள் - சிறிதளவு
துருவிய பாலாடைக்கட்டி - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் ரொட்டித் துண்டுகளை சிறுத் துண்டுகளாக நறுக்கி போட்டு வதக்கி கொள்ளவும்.குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.பிறகு வெந்ததும் பருப்பு கலவை கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கடைந்துக் கொள்ளவும்.
அதில் விரும்பிய காய்கறிகளை போட்டு வேக வைக்கவும்.பருப்புடன் சேர்ந்து காய்கறிகளும் நன்றாக வெந்தபின் துருவிய பாலாடைக் கட்டியைப் போடவும்.அதன் பிறகு வதக்கிய ரொட்டித் துண்டுகளையும் சேர்த்து இறக்கவும்.பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
English Summary
Want feed your child healthy way drink this lentil soup