நீங்க GPay, PhonePe பயன்படுத்திறீங்களா?அக்டோபர் 1 முதல் இனி இப்படி பணம் கேட்டு பெற முடியாது!
UPI Money transfer NPCI Gpay PhonePe
யுபிஐ பணப்பரிவர்த்தனையில் உள்ள ‘Request Money’ அம்சத்தை அக்டோபர் 1 முதல் நிரந்தரமாக நீக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) தீர்மானித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரித்து, மோசடி சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.
‘Request Money’ அம்சம் மூலம் சிலர் தவறான முறையில் பணம் கோருவது மற்றும் பயனர்களை ஏமாற்றுவது போன்ற புகார்கள் அதிகரித்திருந்தது. இதை தவிர்க்கவே அம்சத்தை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் பல புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
UPI Money transfer NPCI Gpay PhonePe