உணவு டெலிவரியில் இறங்கிய ரேபிடோ!
Now Rapido do Food Delivery
2015 முதல் பைக் டாக்ஸி சேவையில் செயல்பட்டு வரும் ரேபிடோ, இப்போது ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் களம் இறங்கியுள்ளது. இதற்காக ‘ஒன்லி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது, இந்த சேவை பெங்களூருவின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. வாவ், ஈட் ஃபிட், கிறிஸ்பி க்ரீம் போன்ற பிரபல பிராண்டுகளுடன் ரேபிடோ ஒப்பந்தம் செய்து செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் தற்போது ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி முன்னிலை வகிக்கின்றன. இந்த நிலையில், ரேபிடோ குறைந்த கமிஷன் வசூலிக்கும் முறைமையின் மூலம் (உணவகங்களிடமிருந்து 8 முதல் 15 சதவீதம்) வாடிக்கையாளர்களையும் உணவகங்களையும் ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
ரேபிடோ, இந்த புதிய முயற்சியின் மூலம் துறையில் கடுமையான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘ஒன்லி’ சேவையை எதிர்காலத்தில் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
English Summary
Now Rapido do Food Delivery