கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு..!
Kodanad murder and robbery case hearing postponed again
நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில், முன்னாள் முதலமைச்சர் மறைந்த செல்வி. ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி இந்த எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரள மாநிலத்தை சேர்ந்த 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். குறித்த வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார்.
வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகி இருந்தனர். விசாணையின் போது அரசு தரப்பில் இவ்வழக்கு தொடர்பில் கூடுதல் சாட்சி விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதி முரளிதரன் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Kodanad murder and robbery case hearing postponed again