ஜம்மு-காஷ்மீர் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
Jammu kashmir flood 46 people death
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தின் சஸோட்டி மலைக் கிராமத்தில் ஆகஸ்ட் 14 மதியம் 12 மணியளவில் கடும் மழையுடன் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த 250-க்கும் மேற்பட்ட பக்தர்களில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 2 சிஐஎஸ்எஃப் வீரர்களும் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகளில் 167 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவத்துக்குப் பிறகு ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், செஞ்சிலுவை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதும், சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதும் முழுமையாக நிறைவடைய குறைந்தது 20 நாட்கள் ஆகும்.
English Summary
Jammu kashmir flood 46 people death