மாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையா?.. உண்மையை அறிந்து கொள்ளுங்கள்..!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள பெண்களுக்கு சில சமயம் மாதவிடாய் நாட்கள் சில நாட்கள் முன்னதாக ஏற்பட கூடாதா? சற்று காலதாமதமாக ஏற்பட கூடாதா? என்ற ஏக்கமானது இருக்கும். ஏனெனில்., மாதவிடாய் காலங்களில் திருவிழாக்கள்., பண்டிகைகள் அல்லது முக்கிய விசேஷ நாட்கள்., சுற்றுலா பயணங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது. 

இதனால் மாதவிடாயை தள்ளிவைக்க பெண்கள் ஆசைப்படும் நிலையில்., இதற்காக சில பெண்கள் மாத்திரைகளையும் உபயோகம் செய்து வருகின்றனர். மாதவிடாயின் உதிர போக்கை தனக்குள் வைத்துக்கொள்ள நாப்கின்கள் உதவுகிறது. 

மாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையா, பெண்கள்ஆரோக்கியம், பெண்கள் ,பெண்கள்360, Periods, menopause, Girl, maathavidai, மாதவிடாய், மாதவிடாய் வலி,

மாதவிடாயினை தடுப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். பொதுவாக பெண்களின் கர்ப்பப்பை என்பது பூவினை போன்றது. மிகவும் மென்மையானது... இதனியா பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் தலையாய கடமையாகும். 

மாதவிடாய் நிறுத்தத்திற்க்கான மாத்திரையை தோழி அல்லது நண்பரின் பரிந்துரையின் பெயரில் வாங்குவது நல்லதல்ல. மருத்துவரின் கர்ப்பப்பை நிலைகளின் பரிசோதனைக்கேற்ப மாத்திரைகள் மாறுபடும். கர்ப்பப்பையின் பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரையை உட்கொள்வது நல்லது.

நமது உடலின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு மாதவிடாய் நிறுத்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதனை சரியாக கடைபிடிக்காத பட்சத்தில் உடலின் எடை அதிகரிப்பது., வயிறு புரட்டல் மற்றும் வாந்தி., வாய்க்கசப்பு போன்ற பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு ஒற்றை தலைவலி பிரச்சனையும் ஏற்படலாம்.

மாதவிடாய் தள்ளிப்போட மாத்திரையா, பெண்கள்ஆரோக்கியம், பெண்கள் ,பெண்கள்360, Periods, menopause, Girl, maathavidai, மாதவிடாய், மாதவிடாய் வலி,

மருத்துவரின் பரிந்துரையின்றி வெளிநாடுகளில் எவ்விதமான மாத்திரையும் பெற இயலாது. இந்தியாவில் நாமே நமக்கு தேவையான மாத்திரைகளை வாங்கும் நிலையில்., அதன் பின் விளைவுகளை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

இயற்கையாக சுழற்சி முறையில் வெளியாகும் மாதவிடாயை தடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாதவிடாய் நாட்களில் போடப்பட்ட அணைத்து முட்டுக்கட்டைகளும்., பெண்களின் உடலில் எவ்வித வலி உண்டாகும் என்பதை அறிந்தே மாதவிடாய் நாட்களில் ஓய்வளித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

to change periods date table is wrong


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->