உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறதா? முடி வளர்ச்சியை அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்..!
Tips For Hair growth
அனைவரும் முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். அதற்காக, பல செயற்கை பொருட்களை பயன்படுத்துவோம். ஆனால், சில பராமரிப்பால் முடி உதிர்வை குறைக்கும்.
சாதாரண சீப்புகளை காட்டிலும் மரத்தால் ஆன பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்தலாம். தலையை துவட்டுதற்கு கடினமான துண்டு பயன்படுத்தாமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட துண்டுகளை பயன்படுத்தலாம்.
அரிசி கழுவிய தண்ணீரைத் தலையில் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். கறிவேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடியாக்கி, சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வு குறையும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் எப்படி செய்வது?
தேவையானவை :
நெல்லிக்காய்கள் - 3
கறிவேப்பிலை (உலர்ந்தது) - ஒரு கைப்பிடி
கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கைப்பிடி
செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட தேங்காய்
எண்ணெய் - ஒரு டம்ளர்
செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட
விளக்கெண்ணெய் - அரை டம்ளர்
இவை அனைத்தையும் இரும்புச் சட்டியில் போட்டு மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். இந்த கலவை கொதித்ததும் அதனை இறக்கி ஆறவிட்டு அதனை பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.