ஆந்திரா ஸ்டைல் தக்காளி தொக்கு.. உடனே செஞ்சி பாருங்க..! - Seithipunal
Seithipunal


வீட்டில் எப்போழுதும் இருக்கும் பொருள் தக்காளி தான். அனைத்து விதமான உணவிற்கும் தக்காளி பயன்படும். தற்போது தக்காளி ஆந்திரா ஸ்டைல் தொக்கு எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

4 பெரிய தக்காளி

1 வெங்காயம்

சிறிய சைஸ் புளி

8மிளகாய் வத்தல்

4பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி

1ஸ்பூன் வர மல்லி

1ஸ்பூன் சீரகம்

கறிவேப்பிலை

பெருங்காயம்

உப்பு

எண்ணெய்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் மிளகாய் வத்தல், வரமல்லி, சீரகம், கறிவேப்பிலை  ஆகியவற்றை வறுத்து கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதே வாணலியில் தக்காளி புளி சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

இவை அனைத்தும் ஆறியவுடன் மிளகாய் மற்றும் தக்காளி கலவையில் மிக்சியில் அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் பூண்டு வெங்காயத்தை  போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் சுவையான தக்காளி தொக்கு தயார்.

இந்த தொக்கை சாதம், சப்பாத்தி, இட்லி தோசை என அனைத்திருக்கும் சாப்பிடலாம். தொக்கு செய்து காற்றுபுகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thakkali Thokku Recipe


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->