ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் அனுப்பிய 'ஸ்பெஷல்' மெசேஜ்...! பிறந்தநாளில் ட்ரெண்டாகும் தலைவர்களின் நட்பு...!
CM Vijay special message Rahul Gandhi Leaders friendship trending birthdays
இந்திய அரசியல் அரங்கின் முக்கிய முகங்களுள் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயும் ராகுல் காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது,"எனது அன்புச் சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்திய தேசத்தின் முன்னேற்றப் பயணத்திற்காகவும், ஜனநாயகத்தின் உயரிய மதிப்புகளை பாதுகாத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக இடைவிடாது குரல் கொடுத்து வரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும்.
மேலும், தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிகரமாக அமையவும், பொதுவாழ்வில் மேலும் பல சாதனைகள் படைத்து சிறப்புடன் பணியாற்றவும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, தவெக உடன் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தது.
அதன் தொடர்ச்சியாக, தவெக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு முக்கிய தலைவர்களுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
CM Vijay special message Rahul Gandhi Leaders friendship trending birthdays