வந்தாச்சு மாம்பழ சீசன்... டேஸ்டியான "மேங்கோ ஜாம்"... செய்வது எப்படின்னு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 2

சர்க்கரை - 1 கப்

எலுமிச்சை பழம் - 1/2

மாம்பழ எசன்ஸ் 

செய்முறை:

முதலில் மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பின்பு இதை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதையடுத்து அடுப்பில் கடாயை வைத்து, அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

பிறகு சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும். பின்பு மாம்பழ கலவை திக்கான பதம் வரும்போது மாம்பழ எசன்ஸ் சேர்த்து நன்றாக கிளறிவும். இதையடுத்து ஜாம் பதம் வந்தவுடன் இறக்கினால் சுவையான மாம்பழ ஜாம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Mango jam recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->