இன்றைய ஸ்பெஷல்..!! வித்யாசமான அல்வா ரெசிபி..!! - Seithipunal
Seithipunal


பூசணிக்காயில் குழம்பு தான் அதிகம் செய்வர் ஆனால் புதிதாக இனிப்பு வகையையும் பூசணிகாயில் செய்யலாம். அதற்கான ரெசிபி.

தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - 300 கிராம்
பால் - 500 மி.லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி - 15
திராட்சை - 15
பாதாம் - 15
நெய் - 250 கிராம்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
ஏலக்காய் - அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

 பூசணிகாயை துருவி அதன் சாற்றை பிழிந்துகொள்ளவும்.  பின்னர் பாலில் குங்கமப்பூ கலந்து பாதாமை பொடியாக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி பூசணி சக்கையை போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடை இடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும். அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை போட்டு வறுத்து வைக்கவும். கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய்த் தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும். நாவூறும் சூடான சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sweet Recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->