உங்கள் குழந்தை சரியாக சாப்பிடவில்லையா.?! குழந்தைகளின் பசியின்மைக்கான காரணங்கள்..!! - Seithipunal
Seithipunal


ங்களது குழந்தை சரியாக சாப்பிடவில்லை அல்லது சாப்பிடவே இல்லை என்றால் கவலை கொள்வது மிகவும் இயல்பான ஒன்றாகும். உங்களுக்கு அவர்களுக்கு போராடி உணவூட்டி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கலாம், எனினும் அவர்களுக்கு இயல்பாகவே உணவில் ஆர்வம் இருக்காது.

நீங்கள் உங்களது குழந்தை சரியாக சாப்பிட மறுப்பதை நினைத்து உங்களது அமைதியை இழக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் அவர்களது வளர்ந்து வரும் ஆண்டுகளில் உணவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது மிகவும் சாதாரணமானதாகும். ஒரு வேளை உங்களது குழந்தை அதுவாகவே சாப்பிடும் சாதாரண அளவை விட குறைவாக சாப்பிட்டு எடை குறைந்தால், உங்களது குழந்தைகள் நல மருத்துவரைச் சந்தித்து அதற்கு வேறு ஏதேனும் அடிப்படை மருத்துவ காரணங்கள் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

உங்களது குழந்தை மிட்டாய்கள், குக்கீகள், பழச்சாறுகள் மற்றும் மற்ற ஆரோக்கியமற்ற வகை மாற்று உணவுகளை உண்டு தனது வயிற்றை நிரப்புகிறதா? ஆம் எனில், நீங்கள் இதனை சரிபார்க்க வேண்டும். உங்களது குழந்தை ஜங்க் வகை உணவுகளை உண்டு அதன் சிறிய வயிறு நிரம்பி விட்டால், பின்னர் அதற்கு உண்பதற்கு வயிற்றில் இடமோ ஆர்வமோ இருக்காது.

நீங்கள் உங்களது குழந்தை முழுமையான எண்ணெய் நிறைந்த உணவை உண்ணும் என நம்புகிறீர்களா? உங்களது குழந்தை முழுமையான எண்ணெய் நிறைந்த உணவை உண்டால் வயிறு முற்றிலும் நிரம்பிவிட்டதாக நினைக்கும், இதனால் அதற்கடுத்த வேளை உணவை அது முற்றிலும் மறுக்கக்கூடும். மேலும் நீங்கள் உங்களது குழந்தை சராசரியாக பருகும் பாலின் அளவையும் கூட குறைக்க வேண்டும்.

உங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அது சாப்பிடாது. உடல்நிலை சரியில்லாத போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் கொல்லிகளும் கூட அவர்களுக்கு பசியின்மை ஏற்பட வழிவகுக்கும். அதற்கு உடல்நிலை சரியான பிறகு, நன்றாக சாப்பிட ஆரம்பித்துவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

reason for children un proper eating


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->