பப்பாளி காயை இப்படி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? - Seithipunal
Seithipunal


பப்பாளி பழத்தை சாப்பிட்டு இருப்போம். ஆனால், பப்பாளி காயில் கூட்டு எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

பப்பாளிக்காய் - 2 கப்

பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சிறு பருப்பு - 1/3 கப்
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அ

அரைக்க :
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 tsp

தாளிக்க :
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை/ கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

முதலில் அரைக்க கொடுக்கபட்டவற்றை அரைத்து கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் தோல் சீவிய பப்பாளி சிறு பருப்பு, தக்காளி , பச்சை மிளகாய்,மஞ்சள், உப்பு  சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.

3 விசில் வந்ததும் அதனை திறந்து அதில் தேங்காய் விழுதை சேர்க்கவும். மற்றோரு அடுப்பில் கடாயை வைத்து அதில் தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை கொடுத்து தாளித்து வேகவைத்த பப்பாளியுடன் சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளி கூட்டு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PappaliKay Kuttu Recipe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal