குழந்தைகள் விரும்பும் சுவையான தேங்காய் பால் பணியாரம்..!
Paal Paniyaram Recipe
பால் பணியாரம் கேள்விபடிருக்கிறோம் ஆனால் அதே தேங்காய் பால் பணியாரம் செய்திருக்கிறோமா? சுவையான தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது என பார்போம்.
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்,
தேங்காய் - ஒன்று,
பால் - ஒரு டம்ளர்,
ஏலக்காய் - சிறிதளவு
சர்க்கரை - கால் கப்

செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஊறவைத்து வடை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்னர் தேங்காய உடைத்து பால் எடுத்து வைத்து கொள்ளவும் அதில் தேவையான அளவு பால், ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
அடுப்பி வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்தும் அரைத்த மாவில் சிறிதளவு சமையல் சோடாவை கலந்து சிறிய உருண்டைகளாக போட்டு பொறித்தெடுக்கவும். பின்னர் பணியாத்துடன் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.