#MenstrualHygieneDay மாதவிடாய் குறித்து பேசுங்கள், ஆதரவாக அன்புடன் இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


மே மாதம் 28 ஆம் தேதியான இன்று உலகளவில் மாதவிடாய் சுகாதார நாள் சிறப்பிக்கப்படுகிறது. உலக அளவில் மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (MHM - MENSTRUAL HYGIENE DAY) முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 அன்று வருடாந்திர விழிப்புணர்வு நாளாக சிறப்பிக்கப்படுகிறது. 

இது ஜெர்மனியைச் சேர்ந்த வாஷ் யுனைடெட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் 2014 இல் தொடங்கப்பட்டது. வளரும் நாடுகளில், மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் பெண்களின் தேர்வுகள் பெரும்பாலும் செலவுகள், கிடைக்கும் தன்மை மற்றும் சமூக விதிமுறைகளால் வரையறுக்கப்படுகின்றன.

மாதவிடாய் குறித்த கலந்துரையாடலை வரவேற்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய நாட்களில் முக்கியத்தும் பெற்றுள்ளது. பெண்களுக்கு மாதத்தின் 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் அவர்கள் படும் வேதனை மற்றும் வலிகளை அவர்களால் மட்டுமே உணர முடியும். 

பெண்களுக்கு பிற நாட்களில் உதவி செய்யாமல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த 3 நாட்களில் அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும் அல்லது அவர்களை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு குரல்.  

இந்த நாளை ட்விட்டர் தளத்திலும் நெட்டிசன்கள் பலரும் சிறப்பித்து வருகின்றனர். பெண்களுக்கு ஆதரவான பல பதில்களையும், அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தைரியம் தெரிவிக்கும் வகையில் #MenstrualHygieneDay என்ற ஹாஷ்டேக்கில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

May 28 Date is Menstrual Hygiene Day Celebration lets Talk Care


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->