அசைவ பிரியரா நீங்கள்??..!! சூப்பரான மலபார் சிக்கன் ரோஸ்ட்..!! - Seithipunal
Seithipunal


அசைவ பிரியர்களுக்கு வித விதமாக முறையில் சிக்கனை செய்து சாப்பிட விரும்புவர். அவர்களுக்காக மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

சிக்கன் – லெக் பீஸ் 6

வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சிக்கன் ஊறவைப்பதற்கு தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1

செய்முறை:

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன்  லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அடுப்பில் வாணலியை  வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள  சிக்கனை பொரித்து எடுக்கவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

அதனுடன்  வறுத்த சிக்கனை அதில் சேர்த்து அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு  பிரட்டி இறக்கவும் சூப்பரான மலபார் சிக்கன் ரோஸ்ட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malabor chicken recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->