சுவையான மாசி கருவாட்டு தொக்கு.. செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


கருவாடு என்றால் சிலருக்கு அதீத பிரியம் இருப்பது வழக்கம். மேலும், சில கருவாட்டு குழம்பை வைத்து மறுநாள் உண்ணுகையில் அதிகப்படியாக சாப்பிடுவதை காணலாம். அவ்வாறு உள்ள கருவாட்டு பிரியர்களுக்கு இந்த மாசிக்கருவாட்டு தொக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். 

தேவையான பொருட்கள்:

பழுத்த தக்காளி - 100 கிராம்

மாசி - 1 துண்டு (25 கிராம்)

பெரிய  வெங்காயம் - 100 கிராம்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

எண்ணெய் - ஒரு குழிகரண்டி

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது

கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு. 

கருவாட்டு தொக்கு செய்முறை :

கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து நன்றாக பொடியாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. பின்னர், தக்காளி, பச்சைமிளகாயை பொடிப்பொடியாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக் கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை பச்சைமிளகாயை கொட்டி வதக்கவும். பின்னர் பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வெந்ததும், கருவாட்டு போடி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும். உப்பு சேர்த்து மஞ்சள் தூள் சேர்க்கவும். தொக்கு சரியான அளவு வெந்து பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மாசிகருவாட்டு தொக்கு ரெடி!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Masi karuvadu Thokku


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->