வேன் ரெயில் விபத்து : பலி எண்ணிக்கை 3 - ஆக உயர்ந்துள்ளது! - மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் - Seithipunal
Seithipunal


கடலூர் செம்மங்குப்பம் பகுதி அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து. இந்த விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிபி ஆதித்ய செந்தில்குமார்:

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்தது,"வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் பலியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.இச்சம்பவம் தற்போது தமிழகத்தியே உலுக்கி கொண்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Van train accident Death toll rises to 3 District Collector Sibi Aditya Senthilkumar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->