வேன் ரெயில் விபத்து : இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உறுதி!- தெற்கு ரெயில்வே
Van train accident Rs 5 lakh compensation assured deceased Southern Railway
கடலூரில் செம்மங்குப்பம் பகுதி அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 'நிவாஸ் மற்றும் சாருமதி' என்ற மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

மேலும் இந்த விபத்தில் சிலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சூழலில் ''தென்னக ரெயில்வே'' , பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 2 மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே:
மேலும் தெற்கு ரெயில்வே தெரிவித்திருப்பதாவது,"உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
மேலும், பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட மக்கள், ரயில்வே கேட் கீப்பருக்கு இன்னும் தகுந்த தண்டனை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
English Summary
Van train accident Rs 5 lakh compensation assured deceased Southern Railway