கதகதக்கும் கதம்ப ஆம்லெட்..!
how to make kathamba omlet
முட்டையில் இதுவரைக்கும், கலக்கி, குழம்பு, ஆம்லெட் இப்படிதான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், புதிய சுவையில் உள்ள கதம்ப ஆம்லெட் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டைகள்
உப்பு
மிளகு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கேரட்
கேப்சிகம்
வெங்காயம்
தக்காளி
கொத்தமல்லி
எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமாக வதங்கியதும் கேரட், தக்காளி, கேப்சிகம் உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக, கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வதக்கி வைத்துள்ள கலவை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நொறுக்கப்பட்ட மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நல்ல நுரை வரும் வரை நன்றாக கலக்கவும்
தொடர்ந்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் முட்டை கலவையை தோசை போல் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்தால் சுவையான கதம்ப ஆம்லெட் தயார்.
English Summary
how to make kathamba omlet