அவல் போண்டா செய்வது எப்படி? - இதோ உங்களுக்காக.!!
how to make aval bonda
தேவையான பொருட்கள்-
தட்டை அவல்
உருளைக்கிழங்கு
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
தயிர்
எண்ணெய்
உப்பு, சீரகம், பெருங்காயத்தூள்
செய்முறை :
முதலில் அவலை நன்றாக கழுவி ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீர் இல்லாமல் வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான அவல் போண்டா ரெடி.