கொள்ளுப் பருப்பு சாதம்! நாவிற்கு அறுசுவைத் தரும்...!
horse gram rice
கொள்ளுப் பருப்பு சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வேகவைத்த கொள்ளுப் பருப்பு - 1 கப்
சாதம் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு பல் - 2
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு, பூண்டு இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டுப் பொரிந்ததும், அரைத்த கலவையைப் போடவும்.அதன்பின் வேக வைத்த கொள்ளுப் பருப்பு மற்றும் சாதம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான கொள்ளுப் பருப்பு சாதம் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவு : இந்த கொள்ளுப் பருப்பு சாதத்தை சுண்டைக்காய் சட்னியோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.