முகப்பொலிவு அதிகரிக்க நெல்லிக்காய் பொரியல் செய்வது எப்படி?..! - Seithipunal
Seithipunal


வாரம் ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் முகப்பொலிவு அதிகரித்து, பளபளப்பான சருமம் கிடைக்கும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிடாமல் இருக்கும் நபர்கள், அதனை பொரியல் போலவும் செய்து சாப்பிடலாம். 

நெல்லிக்காய் பொரியல் செய்யத்தேவையான பொருட்கள்: 

பெரிய நெல்லிக்காய் - 10 
இட்லிபொடி - 2 கரண்டி, 
எண்ணெய், கடுகு, சீரகம், கருவேப்பில்லை - தேவையான அளவு.

தாளிப்பதற்கு: 

கொத்தமல்லி தழை மற்றும் உப்பு - தேவையான அளவு.

நெல்லிக்காய் பொரியல் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட கொத்தமல்லியை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேகவிட வேண்டும்.

நெல்லிக்காய் வெந்ததும் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் சீரகம், கருவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நெல்லிக்காய் துண்டு, உப்பு, இட்லி பொடி சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி சாப்பிடலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Health Tips for Nellikai Poriyal


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->