கரண்டி இல்லாமல் விருந்து சாப்பிடும் பழக்கம்... ! - இன்ஜெரா சொல்லும் பாரம்பரிய கதை...!
habit eating without spoon traditional story told by Injera
இன்ஜெரா என்பது எரித்திரியா நாட்டின் முக்கிய உணவாகும். இது டெஃப் தானிய மாவில் தயாரிக்கப்படும், மென்மையான, பஞ்சு போன்ற அமைப்பும், லேசான புளிப்புச் சுவையும் கொண்ட ஒரு பெரிய வட்ட வடிவ ரொட்டியாகும். இதன் மீது பல்வேறு குழம்புகள் மற்றும் காய்கறி உணவுகளை வைத்து பரிமாறுவார்கள். உணவை சாப்பிடும் தட்டாகவும், உணவை எடுத்து சாப்பிடும் கருவியாகவும் இன்ஜெரா பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
டெஃப் மாவு – 3 கப்
கோதுமை மாவு – 1 கப் (விருப்பத்திற்கேற்ப)
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை
முதலில் டெஃப் மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். இந்த மாவை 2 முதல் 3 நாட்கள் வரை புளிக்க வைக்க வேண்டும்.பிறகு அதில் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி வட்டமாக பரப்ப வேண்டும். இதை திருப்பிப் போடாமல் ஒருபுறம் மட்டும் வேகவைத்து எடுத்தால் இன்ஜெரா தயாராகிவிடும்.
எப்படி பரிமாறப்படுகிறது?
ஒரு பெரிய இன்ஜெராவின் மீது காரக் குழம்புகள், பருப்பு வகைகள், காய்கறி உணவுகள் அல்லது இறைச்சி குழம்புகளை வைத்து பரிமாறுவார்கள். பின்னர் இன்ஜெராவை சிறு துண்டுகளாகக் கிழித்து, அதன் மூலம் குழம்பை எடுத்து சாப்பிடுவார்கள். எரித்திரியாவில் கரண்டிக்கு பதிலாக இன்ஜெராவையே பயன்படுத்துவது வழக்கமாகும்.
English Summary
habit eating without spoon traditional story told by Injera