கொய்யா இலையில் இத்தனை நன்மைகளா??..! சரும பாதுக்காப்பிற்கு பயன்படும் கொய்யா இலை..!! - Seithipunal
Seithipunal


கொய்யா பழத்தில் பல நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் கொய்யா இலை சரும பராமரிப்புக்கு உதவும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். கொய்யா இலையை எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்.

இளமையான தோற்றத்திற்கு :

தேவையான அளவு கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.

பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். வாரமிருமுறை இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய் சருமத்திற்கு.

கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி எழுமிச்சைபழச் சாறு சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் எண்ணெய் பசை நீங்கி உங்கள் சருமம் பொலிவாகும்.

கொய்யா இலையை உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்னர் சோதித்து பார்த்து பயன்படுத்துங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Guava leaf used for skin care


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->