மாலைநேர ஸ்நாக்ஸ் : கடலை மாவு பஜ்ஜி.. செய்வது எப்படி.?!
gram dhal bajji preparation in tamil
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - கால் கிலோ
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
வாழைக்காய் - 2
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 3 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ளவும்.
கடலை மாவில் தேவையான தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், சீவிய வாழைக்காயை, கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும்.
பஜ்ஜி சிவந்தவுடன் எடுத்து பின்னர் சூடாக பரிமாறவும்.
English Summary
gram dhal bajji preparation in tamil