சுவையில் அசத்தும் வித்தியாசம்! -கோவக்காய் பனீர் குழம்பு ரெசிபி ரெடியாகி விட்டது...!
Gourd and paneer gravy
கோவக்காய் பனீர் குழம்பு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கோவக்காய் - கால் கிலோ
பனீர் துண்டுகள் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2 (அரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
புளிக் கரைசல் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க :
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :
முதலில், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பனீரை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும்.பின் உப்பு, மஞ்சள்தூள், வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இதில் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வறுத்த பனீரை போட்டு, நன்றாகக் கொதித்ததும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து இறக்கவும்.இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தோசை மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்.