கோதுமை ரவையில் பிரியாணி - எப்படி செய்வது?
gothumai ravai biriyani recepie
கோதுமை ரவையில் பிரியாணியை எப்படி செய்வதென்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
* கோதுமை ரவை
* எண்ணெய்
* பிரியாண இலை
* பட்டை
* சோம்பு
* வெங்காயம்
* பச்சை மிளகாய்
* இஞ்சி பூண்டு பேஸ்ட்
* உப்பு
* மிளகாய் தூள்
* மல்லித் தூள்
* மஞ்சள் தூள்
* கரம் மசாலா
* சீரகத் தூள்
* கேரட்
* பீன்ஸ்
* பட்டாணி
* தண்ணீர்
* கொத்தமல்லி
செய்முறை:-
* அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்த்து 10 நொடிகள் வதக்கிய பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் அல்லது பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின்பு அதில் கோதுமை ரவையை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி தேவையான விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லி இலையைத் தூவி கிளறினால், சுவையான கோதுமை ரவா பிரியாணி தயார்.
English Summary
gothumai ravai biriyani recepie