பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்...! - வீட்டிலேயே 'நெயில் ஆர்ட்' செய்ய நினைக்கும் பெண்களுக்கு சூப்பர் டிப்ஸ்...!
Dont go beauty parlor Super tips women who want to do nail art at home
இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு நகங்களை விதவிதமான நிறங்களில் அலங்கரிப்பது ஒரு தனி விருப்பமாகிவிட்டது. ஆனால் எவ்வளவு அழகாக நெயில் பாலிஷ் போட்டாலும், சில நாட்களிலேயே அது உரிந்து போய்விடுகிறது.
உங்கள் நகங்கள் நீண்ட நாட்கள் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க இந்த எளிய குறிப்புகள் உதவும்.
உங்கள் நகத்துக்கு ஏற்ற வடிவத்தை தேர்வு செய்யுங்கள்
நகத்தின் முனைகளை ஓவல் வடிவத்தில் வெட்டினால் மென்மையான, அழகிய தோற்றம் கிடைக்கும்.
நுனியை நேராக வெட்டினால் சதுர வடிவத்தில் இருந்து ஸ்மார்ட்டான தோற்றம் தரும்.
நகத்தின் ஓரங்களை குறைத்து, முனையை லேசாக கூர்மையாக்கினால் ஆல்மண்ட் வடிவம் கிடைத்து செம்ம ஸ்டைலிஷ் லுக் தரும்.

நகங்களை சுத்தமாக வைத்திருங்கள்
நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் பழைய பாலிஷ் முழுவதையும் நீக்குவது அவசியம்.
ரிமூவர் பயன்படுத்தி நகங்களை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
நகம் சுத்தமாக இருந்தால்தான் புதிய பாலிஷ் அழகாகவும் மெருகாகவும் தெரியும்.
நகம் மஞ்சள் நிறமாக மாறுகிறதா?
நெயில் பாலிஷை நீண்ட நாட்கள் மாற்றாமல் வைத்திருந்தால் நகத்தின் இயல்பான நிறம் மாறி மஞ்சள் படர ஆரம்பிக்கும்.
இதனை தவிர்க்க, முதலில் பேஸ் கோட் எனப்படும் வெளிப்படையான பாதுகாப்பு அடுக்கை பூசுங்கள்.
அதற்குப் பிறகு உங்களுக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினால் நகங்கள் நிறமாற்றம் அடையாமல் பாதுகாப்பாக இருக்கும்.
கிளிட்டர் டச் கொடுத்து கவர்ச்சி கூட்டுங்கள்
நகம் முழுவதும் சாதாரண மேட் நிற பாலிஷ் பூசி, நகத்தின் முனைகளில் மட்டும் லேசாக கிளிட்டர் பாலிஷ் தடவுங்கள்.
இது பார்ட்டி, விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மிகவும் டிரெண்டியான மற்றும் கண்ணை கவரும் தோற்றத்தை தரும்.
இயற்கையான நக பராமரிப்பை மறக்காதீர்கள்
நகங்கள் உறுதியாகவும், இயற்கையாக பளபளப்பாகவும் இருக்க வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை நகங்களிலும் அதைச் சுற்றியுள்ள தோலிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
இது நகங்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவும்.
English Summary
Dont go beauty parlor Super tips women who want to do nail art at home