சாக்லேட், கரமேல் இணைவு...! - ஹங்கேரியின் டோபோஸ் டோர்டா இனிப்பில் உலகம் உருகுகிறது...!
Chocolate and caramel fusion world melts Hungary Topos Torta dessert
Dobos Torta (டோபோஸ் டோர்டா)
இது ஹங்கேரியின் பிரபலமான ஸ்பொன்ஜ் கேக் லேயர் டெசர்ட் ஆகும். பல அடுக்குகளாக ஸ்பொன்ஜ் கேக், சாக்லேட் பட்டர் க்ரீம் மற்றும் மேலே கரமேல் க்ளேஸ் பூசப்பட்டு உருவாக்கப்படும் இது, கண்ணுக்கும், நாக்குக்கும் விருந்தாக இருக்கும்!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 1 கப்
முட்டை – 6
சர்க்கரை – 1 கப்
வெண்ணெய் – 200 கிராம்
கோகோ பவுடர் – 2 ஸ்பூன்
கரமேல் செய்ய சர்க்கரை – ½ கப்

தயாரிப்பு முறை:
முட்டை மஞ்சள் மற்றும் வெள்ளை பிரித்து, மஞ்சளுடன் சர்க்கரை கலந்து நன்கு அடிக்கவும்.
அதில் மைதா சேர்த்து ஸ்பொன்ஜ் கேக் கலவை தயார் செய்யவும்.
கேக் அடுப்பில் பேக் செய்து ஆறு துண்டுகளாக வெட்டவும்.
சாக்லேட் பட்டர் க்ரீம் தயாரித்து ஒவ்வொரு அடுக்கிலும் தடவி ஒட்டவும்.
கடைசியாக, மேலே கரமேல் உருக்கி ஊற்றி குளிர வைக்கவும்.
English Summary
Chocolate and caramel fusion world melts Hungary Topos Torta dessert