சப்பாத்தி மீதம் இருந்தால் இதை செய்து கொடுங்கள்., சூப்பரான ரெசிபி..!! - Seithipunal
Seithipunal


சுவையான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காலையில் செய்த சப்பாத்தி மீதம் இருந்தால் குழந்தைகளுக்கு சூப்பர் ரெசிபி செய்து கொடுக்கலாம். அதை எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

சப்பாத்தி - 4

முட்டைக்கோஸ் - 1/4 கப்
கேரட் - 2
குடைமிளகாய் - 1 சிறியது
பூண்டு - 5 பற்கள்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

முதலில் காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். பூண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அதில் குடை மிளகாயும் சேர்க்கவும்.

பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்..

பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ் தயார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chapathi Vegetable Noodles


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->