கண்ணுக்கு நன்மை பயக்கும் கரிசலாங்கண்ணி கீரையை வைத்து கடையல் செய்யலாமா...!
Can we make kadayal with karisalangkanni spinach which is beneficial eyes
கரிசலாங்கண்ணி கீரை கடையல்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
கரிசலாங்கண்ணி கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 8
மிளகாய் வற்றல் - 6
பூண்டுப் பல் - 6
தக்காளி - 3
மிளகு, மஞ்சள், சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில், கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம் அரைத்து, அதனுடன் மஞ்சள், கீரை ஆகியவற்றை சேர்த்து வேகவைக்க வேண்டும்.பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயைக் கிள்ளிப்போட்டு வதக்கி, வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பின்பு, வேகவைத்து எடுத்த கீரையைக் கடைந்து அதனுடன் சேர்க்க வேண்டும். பின்பு பெருங்காயம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்புப் போட வேண்டும்.
கீரை நன்கு வெந்து கொதி வந்தவுடன் இறக்கி பருப்பு கடையும் மத்தால் கடைய வேண்டும். இப்போது கரிசலாங்கண்ணி கீரை கடையல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை
English Summary
Can we make kadayal with karisalangkanni spinach which is beneficial eyes