மகளிர் பக்கம்: உள்ளாடைகளின் வகைகள் மற்றும் பிற சந்தேகங்களுக்கான தீர்வுகள்.! - Seithipunal
Seithipunal


பெண்கள் அணியும் உள்ளாடையான மார்பக கச்சை என்ற பிரா குறித்த விரிவான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வுகள் தொடர்பாக தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் மார்பகத்தின் அழகை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் காட்டும் முக்கியத்துவத்தை, மார்பகத்தை பாதுகாக்கும் உள்ளாடைகள் மீது தருவதில்லை, மார்பகத்தின் பாதுகாப்பில் உள்ளாடைகளின் முக்கியமான பங்கும் உள்ளது. உள்ளாடைகளின் தரம், மார்பகத்தோடு பொருந்துதல் என்று சின்ன சின்ன விஷயமும், உள்ளாடைக்கு எடுப்பான மேலாடை தோற்றமும் முக்கியம். கடைகளுக்கு சென்று உள்ளாடையை வாங்கும் சமயத்தில் கூச்சம் இருப்பின், பெண்கள் பணியாளர்களுக்கு விஷயத்தை தெரிவித்து வாங்க (இன்றுள்ள காலத்தில் ஆண்களும் பெண்களின் உள்ளாடை விற்பனை செய்யும் இடத்தில் பணியாற்றுவதால்) வேண்டும். நாப்கின்களின் விழிப்புணர்வை போலவே, உள்ளடைக்கான விழிப்புணர்வும் அவசியம்.

பெண்கள் பருவமடையும் வயதில் இருக்கும் பட்சத்தில், மார்பகத்தை பராமரிக்கும் உள்ளாடையை அணிய துவங்குகின்றனர். இன்னும் பல வருடமாக உள்ளாடையை பயன்படுத்தி வரும் பெண்களுக்கு, தாங்கள் சரியான அளவுடைய உள்ளாடையை அணிந்துகொண்டு இருக்கிறோமா? என்ற சந்தேகம் இருப்பதும் உண்டு. உள்ளாடையை பொறுத்த வரையில், மார்பகத்திற்கு சற்று கீழ் புறமாகவும் - இடுப்பிற்கு மேல் புறமாகவும் வழக்கமாக அணிவதுண்டு. இடுப்பிற்கு மேல் இருக்கும் அளவினை கூறி பெண்கள் உள்ளாடையை தேர்வு செய்யும் பட்சத்தில், மார்பகத்தை பற்றியிருக்கும் மார்பக கச்சைகளின் (பிரா கப்) அளவுகள் சரிவர இல்லை என்றால், உள்ளாடையின் தோற்றமானது சிறப்பாக இருக்காது. இதனால் உடல் ரீதியான தொந்தரவும் ஏற்படலாம்.

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

உள்ளாடையை அணியும் நேரத்தில், அதன் நிறத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம். வெளிர் நிறமுடைய ஆடைகள் அணியும் பட்சத்தில், வெளிர் நிற உள்ளாடைகளும், அடர்நிறத்திலான ஆடைகளை அணியும் பட்சத்தில், அடர் நிற உள்ளாடைகளையும் தேர்வு செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாது சேலை, சுடிதார், வடக்கத்திய ஆடைகள், டி-சர்ட் போன்ற ஆடைக்கு ஏற்றவாறு இருக்கும் உள்ளாடையை தேர்வு செய்வது நல்லது. தளர்ச்சியாக இருக்கும் மார்பகத்திற்கு, மார்பகத்தினை தாங்கி பிடிப்பதற்கு "அண்டர் வியர் பிரா" (Underwired Bra) அணியலாம். இந்த வகையான மார்பக கச்சையை எடை கூடுதலான பெண்களும் பயன்படுத்தலாம். சிறிய அளவிலான மார்பகத்தை கொண்ட பெண்கள் "பேடடு பிரா" (துடுப்பு பிராக்கள் - Padded Bra) பயன்படுத்த வேண்டும். 

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

பெண்கள் அணியும் மார்பக கச்சையில் பல அம்சங்களும் உள்ளது. ஒரே மாதிரியான உள்ளாடையை பெண்கள் உபயோகம் செய்யாமல், நாம் உடுத்தும் உடைகள், செய்யும் வேலை மற்றும் செல்லவேண்டிய இடத்திற்கானவைகளை பொறுத்து உள்ளாடையை தேர்வு செய்தல் அவசியம்.. அந்த வகையில், பெண்களுக்காக ஐந்து முதல் ஆறு வகையான உள்ளாடைகள் உள்ளது. இது குறித்த விழிப்புணர்வாக பெண்கள் அறிந்துகொள்ளுதல் அவசியம். இனி நாம் உள்ளடைக்கான வகைகள் குறித்து அவசியம்.

உள்ளாடையின் வகைகள்:

டீனேஜ் பிரா (Teenage Bra) - விடலைப்பருவ மார்பக கச்சை, 
எவ்ரிடே பிரா (Everyday Bra) - தினசரி உள்ளாடை, 
டி-ஷர்ட் பிரா (T-Shirt Bra) - ஆங்கில எழுத்தான "T" வடிவத்தில் உள்ள சட்டைக்கான உள்ளாடை, 
புஷ் அப் பிரா (Push Up Bra) - மார்பக திசுக்களை மேலே தள்ளும் உள்ளாடை, 
பிரைடல் பிரா (Bridal Bra) - திருமணத்திற்கான உள்ளாடை, 
நர்சிங் பிரா (Nursing Bra) - குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான உள்ளாடை, 
ஃபிரன்ட் ஓப்பன் பிரா (Front Open Bra) - முன்பக்க ஊக்குகள் உள்ள உள்ளாடை,
கேஜ் பிரா (Cage Bra) - கூண்டு உள்ளாடை, 
பிராலெட் பிரா (Bralette Bra) - இரட்டை அடுக்கு உள்ளாடை, 
கேமி பிரா (Cami Bra) - ஆரவாரமான பட்டைகள் அல்லது இடுப்பு வரை நீண்டு இருக்கும் உள்ளாடை, 
ஸ்டிக் ஆன் பிரா (Stick On Bra) - சிலிகான் கூழ்மம் நிரப்பப்பட்ட உள்ளாடை,
டியூப் பிரா (Tube Bra) - குழாய் வடிவமுள்ள உள்ளாடை...

இனி இதற்கான விளக்கத்தை பற்றி, ஒவ்வொன்றாக நாம் காண்போம். 

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

டீனேஜ் பிரா (Teenage Bra) :

பெண்கள் முதன் முறையாக பயன்படுத்தும் உள்ளாடைகள் விடலைப்பருவ உள்ளாடை (டீனேஜ் பிரா) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையான உள்ளாடையை பயன்படுத்தும் சமயத்தில், புதியதாக பயன்படுத்துவதன் காரணமாக சில அசவ்கரியங்கள் ஏற்படலாம். 

எவ்ரிடே பிரா (Everyday Bra) :

பெண்கள் தினசரி அணியும் ஆடைகளுக்கு பயன்படுத்தப்படும் உள்ளாடையை (அன்றாடம் உபயோகம் செய்யும் உள்ளாடை) எவ்ரி டே பிரா என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையான உள்ளாடைகள் எளிமையான மற்றும் குறைந்த எடையுள்ள, பராமரிக்க எளிமையான உள்ளாடை ஆகும். 

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

டி-ஷர்ட் பிரா (T-Shirt Bra) :

பெண்கள் டி-ஷர்ட் வடிவிலான ஆடைகளை அணியும் சமயத்தில் மற்றும் மெல்லிய டாப்ஸ் வடிவிலான ஆடைகளை அணியும் சமயத்தில் டி-சர்ட் உள்ளாடையை அணியலாம். 

புஷ் அப் பிரா (Push Up Bra) :

பெண்கள் அணியும் மார்பகத்தை பொறுத்த வரையில், எடுப்பான மார்பகத்தின் அளவை பெறவும், தளர்ந்துள்ள மார்பகத்தை தாங்கி பிடிப்பதற்கும் புஷ் அப் பிராக்கள் உதவுகிறது.

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

பிரைடல் பிரா (Bridal Bra) :

பெண்கள் அணியும் உள்ளாடையில் திருமணத்திற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உள்ளாடையை திருமணத்திற்கான உள்ளாடை (பிரைடல் பிரா) என்று அழைக்கப்படுகிறது. இந்த உள்ளாடையில் புஷ் அப், பிராண்ட் ஓபன் (Front Open) மற்றும் லாங்லைன் (Longline) போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது.

நர்சிங் பிரா (Nursing Bra) : 

பெண்கள் அணியும் உள்ளாடையில் நர்சிங் பிரா என்பது பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்தியேக உள்ளாடை ஆகும். பிற உள்ளாடைகளில் உள்ளாடைகள் ஊக்குகள் பின்பகுதியில் இருக்கும். இந்த வகையான உள்ளாடையை அணிந்து குழந்தைகளுக்கு பாலூட்டினால் சிரமம் ஏற்படுவது இயல்பானது. இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு உள்ளாடையின் முன்பக்கத்தில் பட்டன் இருக்கும் பட்சத்தில் எந்த விதமான சிரமமும் இன்றி குழந்தைகளுக்கு பாலூட்டி இயலும்.

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

ஃபிரன்ட் ஓப்பன் பிரா (Front Open Bra) :

பெண்கள் அணியும் உள்ளாடையில் பின் பகுதியில் ஊக்குகள் இருக்கும். இதனால் சிரமம் ஏற்படும் பட்சத்தில், முன்பகுதியில் ஊக்குகள் உள்ள உள்ளாடையை பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது.

ப்ளஸ் சைஸ் பிரா (Plus Size Bra) :

பெண்களில் சிலருக்கு மார்பகத்தின் அளவானது பெரிதாக இருக்கும். மார்பகத்தின் அளவை பெரியதாக கொண்ட பெண்கள் பிளஸ் சைஸ் பிராக்கள் (உள்ளடக்கும் உள்ளாடை) உபயோகம் செய்வதன் மூலமாக, மார்பகம் முழுவதுமாக உள்ளடையால் மறைக்கப்படும். 

bra, girl inner wear, உள்ளாடை, பிரா, பெண்களின் உள்ளாடை பிரா, பெண்கள் பிரா,

ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless Bra) :

சில பெண்கள் ஆடைகளை தோள்பட்டை பகுதியில் இருக்கதவாறு அணிவது வழக்கம். நாம் கூட பல திரைப்படங்களில் இவ்வாறான உடைகளை கண்டிருப்போம். இந்த வகையான சமயத்தில் ஸ்ட்ராப் இல்லாத ஆடைகளை அணிவது உதவியாக இருக்கும். 

கேஜ் பிரா (Cage Bra) :

பெண்கள் குறைவான கழுத்துப்பகுதியுள்ள (லோ நெக் டாப்ஸ்) ஆடைகள் மற்றும் டி-சர்ட் ஆடைகளை அணியும் சமயத்தில் இவ்வாறான உள்ளாடையை அணிவிக்கும் பட்சத்தில் நன்றாக இருக்கும். 

இதனை தவித்து உள்ள ஸ்டிக் ஆன் பிரா (Stick On Bra), பிராலெட் பிரா (Bralette Bra), கேமி பிரா (Cami Bra), டியூப் பிரா (Tube Bra) போன்றவற்றையும் அணியலாம். அந்தந்த ஆடைகளுக்கு ஏற்றவாறு உள்ளாடையை உபயோகம் செய்வதன் மூலமாக, மார்பகத்தில் உள்ளாடையால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பிக்க இயலும். சரியான அளவுள்ள உள்ளாடையை தேர்வு செய்தல், சுத்தம் செய்து உள்ளாடையை உபயோகம் செய்தல் மற்றும் தோழிகளின் உள்ளாடையை உபயோகம் செய்யாமல் இருத்தல் பிற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bra Itching Avoid Methods and Type of Bra and Explanation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->