குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகான சிவந்த நிறத்துடன் பிறக்கும். அதனை அதிகளவு சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்பட்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என பல விஷயங்கள் நம்மிடையே பரவி கிடக்கிறது. அதுகுறித்து விஷயங்களை இன்று தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
அன்றைய நாட்களில் வசதிகொண்டவர்கள் தங்கபுஷ்ப கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டதை போல குங்குமப்பூ கட்டுக்கதையும் பரப்பப்பட்டுள்ளது. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தைகள் நல்ல நிறத்துடன் பிறப்பார்கள் என்று பரவலான கருத்து அனைவரிடமும் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் குங்கும பூவுக்கும், குழந்தையின் நிறத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த தகவலை இனி அறிந்துகொள்ளலாம்.

குங்குமப்பூ :
இந்திய திருநாட்டில் உள்ள காஷ்மீரில் விளையும் பயிரில், முக்கியத்துவம் வாய்ந்த பயிராக குங்குமப்பூ உள்ளது. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இதனை மசாலாக்கள் ராஜா என்று அங்குள்ள வட்டாரத்தில் அழைப்பார்கள். முகப்பூச்சு, வாசனை திரவியம் என்று பல்வேறு விஷயங்களுக்கும் இது உதவுகிறது. இதனை ஜெபரான், கூங், கேசர் என்றும் கூறுவார்கள்.
கிடைக்கும் இடங்கள் :
உலகளவில் பல இடங்களில் குங்குமப்பூ கிடைத்தாலும், இந்தியாவில் உள்ள இமயமலை பகுதியில் விளையும் குங்குமப்பூவுக்கு உலகளவில் பெரிய வரவேற்பே உள்ளது. இதனைப்போன்று, ஈரான், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் விளையும் குங்குமப்பூவும் உலகளவில் நல்ல சந்தையை கொண்டுள்ளது.

குங்குமப்பூ இயல்புகள் :
குங்குமப்பூவில் சுவை மற்றும் மனம் ஒவ்வொருவரையும் கவர்ந்து இழுக்கும். இதனை சாப்பிட தொடங்கினால், அதனை மீண்டும் சாப்பிட வைத்துவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையாகவே குங்குமப்பூவில் மனம் அவர்களை ஈர்த்துவிடும். பல்வேறு மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ அழகுக்கு மட்டுமல்லாது புற்றுநோய், முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியை குறைக்கவும் குங்குமப்பூ பயன்படுகிறது என்றும் கூறப்படுகிறது. குங்குமப்பூவினால் ஏற்படும் மகிழ்ச்சியான உணர்வு, நோயாளிகள் நோயில் இருந்து விடுதலை பெற தேவையான நம்பிக்கையை கொடுக்கிறது.

குங்குமப்பூ விலை :
குங்குமப்பூ விலையை பொருத்தளவு எப்போதுமே அது உச்சக்கட்டம் தான். கிராம் அளவு கொண்ட குங்குமப்பூவின் விலையே ஆயிரத்திற்கும் மேல் வரும். ஒரு குங்குமப்பூவில் வெறும் 3 இதழ்கள் மட்டுமே இருக்கும். சுமார் 1000 குங்குமப்பூவை எடுத்தால், 28 கிராம் அளவுக்கு தான் குங்குமப்பூ இதழ்களை சேகரிக்க முடியும்.
சேமிப்பு முறைகள் :
குங்குமப்பூவினை குளிர்ச்சியான இடங்களில் வைத்து பாதுகாக்க வேண்டும். அவ்வாறு குளிர்ச்சியான நிலையில் இருந்தால் தான், அதன் தன்மை மாறாமல் இருக்கும். இதனை குளிர்பதன பெட்டியில் வைத்து வருடக்கணக்கில் கூட பயன்படுத்தலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ :
பொதுவாக கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள் சிவந்த நிறத்துடன் பிறக்க பாலில் குங்குமப்பூவை போட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்குவார்கள். இந்த நிலை பல வருடமாக தொடர்ந்து வந்தாலும், குழந்தையின் நிறத்துக்கும் - குங்குமப்பூவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மரபணுவே குழந்தையின் நிறத்தை தீர்மானம் செய்கிறது.
இதனைத்தவிர்த்து, குங்குமப்பூ கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ ரீதியாக உதவி சேகரித்து. பாலில் குங்குமப்பூவை சேர்த்து கர்ப்பிணி பெண்கள் குடித்தால், அதன் மனம் மற்றும் சுவை கர்ப்பிணி பெண்களின் வாந்தியை கட்டுப்படுத்துகிறது. பசி உணர்வை தூண்டுகிறது. மிற்றபடி, நிறம் தொடர்பான தகவல் விற்பனைக்காக செய்யப்பட்ட கட்டுக்கதை மோசடியே.

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை 5 ஆவது மாதத்தில் இருந்து சாப்பிட தொடங்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் குழந்தை இருக்கும் என்பதால், அவர்கள் பெரும்பாலும் சாப்பிட முடியாது. வாந்தி உணர்வு இருக்கும். இதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடை நிறைவு செய்ய குங்குமப்பூ பெரும் உதவி செய்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூவால் கிடைக்கும் பலன்கள் :
மன அழுத்தம் :
கர்ப்பமாக உள்ள பெண்கள் குழந்தை வளர்ச்சி அச்சம், பிரசவ பயம் போன்ற பல காரணத்தால் மன அழுத்தத்திலேயே இருப்பார்கள். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க, குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

முகத்தில் பொலிவு :
கர்ப்பமாக உள்ள பெண்களின் உடல் எடை அதிகரிப்பதோடு, முகத்தில் சிறு மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் முதிர்ச்சி கவலையை தவிர்க்க, பாலில் குங்குமப்பூவை கலந்து குடிக்கலாம். இதனால் முகப்பொலிவு அதிகரித்து, அழகான தோற்றமும் ஏற்படும்.
ஆண்டி ஆக்சிடன்ட் :
குங்குமப்பூவில் நிறைந்து காணப்படும் ஆண்டி ஆக்சிடன்ட், உடலில் உள்ள செல்களின் தேவையற்ற பொருட்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மறதி :
குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்தால், மறதி பெருமளவு தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது. வயது காரணமாக ஏற்படும் அல்சைமர் என்ற மறதி நோயை கட்டுப்படுத்தும் குணமும் கொண்டுள்ளது.
வழுக்கை தலை :
முடி உதிர்ந்து தலையில் முடி இல்லாமல் காணப்படும் நபர்களுக்காக குங்குமப்பூ தைலமும் உள்ளது. இதனை பயன்படுத்தி வந்தால் முடி உதிரும் பிரச்சனை சரியாகி, முடிகள் வலுவடைகிறது.

செரிமான சக்தி :
பெண்களின் கர்ப்பகாலத்தில் பிற நேரங்களை விட மெதுவாகவே செரிமானம் நடைபெறும். இதனால் இரைப்பை பகுதியில் அசிடிட்டி என்ற அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்யவும் குங்குமப்பூ உதவி செய்கிறது.
பசியை அதிகரித்தல் :
கர்ப்ப காலங்களில் செரிமான சக்தி பெண்களுக்கு குறைவாக இருக்கும் காரணத்தால் பசி நேரத்திற்கு எடுக்காது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, குழந்தையின் நலனும் பாதிக்கப்படும். குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்தால் செரிமான பிரச்சனை சரி செய்யப்பட்டு, உரிய நேரத்தில் பசியை ஏற்படுத்தும். குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

முடி உதிர்வது :
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் காரணமாக அதிகளவு முடி உதிரும் பிரச்சனை ஏற்படும். இதனால் ஏற்கனவே ஏற்பட்டு இருந்த மனக்குழப்பம் வேதனையை அதிகரிக்கும். இது கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தாக மாறலாம். குங்குமப்பூ முடி உதிர்வை அதிகரிக்கும்.
குங்குமப்பூவை அதிகளவு எடுத்துக்கொண்டால் உடலுக்கு ஆபத்து? :
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். அதனைப்போல தான் குங்குமப்பூவும். அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிட்டால் அல்லது பாலில் கலந்து குடித்தால், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

சிலர் அறியாமை காரணமாக குழந்தை சிவந்த நிறத்தில் வேண்டும் என அதிகளவு குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பார்கள். அது மிகவும் தவறான விஷயம். நாளொன்றுக்கு 10 கிராம் அளவுக்கு மேல் குங்குமப்பூவை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படும்.
சில சமயங்களில் கர்ப்பப்பை சுருக்கம், கருச்சிதைவு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஆபத்தான பிரச்சனைகள். கர்ப்பப்பை சுருக்கம் ஏற்படும் பட்சத்தில், மற்றொரு முறை கருத்தரிக்க இயலாத சூழலும் ஏற்படலாம்.

குங்குமப்பூவை அதிகளவு எடுத்துக்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவு :
குங்குமப்பூவினை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆபத்தானது. அது மனிதரின் உயிரை பறிக்கும் வினையாற்றும் வல்லமையும் கொண்டது. நாளொன்றுக்கு 5 கிராம் முதல் 10 கிராம் வரை மட்டுமே சாப்பிடலாம். 20 கிராம் வரை நாளொன்றுக்கு குங்குமப்பூ சாப்பிட்டால், சிலருக்கு உயிர் பறிபோகும் வாய்ப்பும் ஏற்படும்.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் அளவுக்கு அதிகமாக குங்குமப்பூவினை எடுத்துக்கொண்டால், குழந்தைக்கு தாய்ப்பாலே பிரச்சனையாக முடியும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். இதனால் ஏற்படும் பக்கவிளைவு மூளையை தாக்கி, அந்நியன் பட விக்ரமுக்கு ஏற்பட்ட பை போலார் டிசார்டரை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனைப்போல இதயத்தில் பாதிப்பு ஏற்படுவது, இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்துவிடுவது போன்ற பாதிப்பும் ஏற்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமான நேரங்களில் விருப்பமான உணவையும் சாப்பிட்டால் வாந்தி வருகிறதே என்ற கவலை இருந்தால், ஒரு குங்கும பூவுடன் உணவை சேர்த்து சாப்பிடலாம். இதனால் வாந்தி ஏற்படாது. உணவும் விரைந்து செரிமானம் அடையும்.
குங்குமப்பூ கலப்படம் :
குங்குமப்பூவில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதும் நடக்கத்தான் செய்கிறது. அதில் உண்மையான குங்குமப்பூ எது? கலப்படம் எது என்பதை சில வழிமுறைகளில் உறுதி செய்யலாம்.
சூடான நீரில் குங்குமப்பூவினை போட்டால் அது கரைந்துவிடும். தண்ணீர் தங்க நிறம் போன்ற மாற்றத்திற்கு வரும். இந்த சமயத்தில் ஏற்படும் நறுமணம் நீடித்து இருக்கும். போலியான குங்குமப்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்தால், அதில் நறுமணம் என்பது இருக்காது. தண்ணீரின் நிறமும் மாறாது.

கர்ப்பகாலங்களில் மருத்துவரை சந்திக்கும் சமயங்களில் குங்குமப்பூவை சாப்பிடும் முறை, அளவு, நேரம் குறித்து கேட்டு சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ளலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நினைவில் வைத்து செயல்படுவது சாலச்சிறந்தது.
குங்குமப்பூ பிரியாணி :
குங்குமப்பூ பிரியாணி என்பது வழக்கமான பிரியாணி தான். முதலில் பிரியாணிக்கு தேவையான மசாலா பொருட்கள், இறைச்சி, அரிசி போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கரண்டி அளவு நீரை கொதிக்க வைத்து, அதில் குங்குமப்பூ இதழை சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன்பின்னர், பாத்திரத்தில் தேவையான பொருட்களை சேர்ந்து பிரியாணியை தயார் செய்ய தொடங்க வேண்டும். இதன்போது, இடையிலேயே குங்குமப்பூ நீரையும் சில துளிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் சேர்த்து பிரியாணியை சமைத்தால் குங்குமப்பூ பிரியாணி தயார். இவ்வாறு செய்வதால் குங்குமப்பூவின் சுவை மற்றும் மனம் உணவில் இருக்கும். கர்ப்பிணி பெண்கள் வாந்தி போன்ற பிரச்சனை இல்லாமல் உணவை சாப்பிடலாம்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.