பேக்கிங் சோடாவின் பயன்கள் மற்றும் அழகு குறிப்புகள்...! - Seithipunal
Seithipunal


முழங்கை கருமை மறைய:

  • பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும்.

எண்ணெய் பசை நீங்க:

  • பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அந்நீரை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க, முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.


மஞ்சள் நிறம் மாற:

  • ஈரமான டூத் பிரஷ்ஷை பேக்கிங் சோடாவில் தொட்டு, பற்களைத் துலக்கி, வெதுவெதுப்பான நீரால் வாயைக் கழுவ, பற்களில் உள்ள மஞ்சள் படலம் நீங்கும்.

பற்குழி நீங்க:

  • பேக்கிங் சோடா-கால்கப், உப்புத்தூள்-ஒரு சிட்டிகை, சர்க்கரை- ஒரு டீஸ்பூன், கற்பூரம்-ஒரு சிட்டிகை, லவங்கம்-4 இவை எல்லாவற்றையும் பொடி செய்துகொள்ளவும்.அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் 2, 3 சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டு, அதை தொட்டு விரலால் பற்களை அழுத்தித் துலக்கி வந்தால், பற்குழி, வாய் துர்நாற்றம் போன்றவை இல்லாமல், உங்கள் புன்னகை ஆரோக்கியமாக இருக்கும்.

அக்குள் கருமை நீங்க:

  • ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.இந்த முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வருவதன் மூலம், அக்குள் கருமை நீங்கி அக்குள் வெள்ளையாகி விடும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits and beauty tips of baking soda


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->