இனிப்பான... சுவையான... பாதுஷா... செய்யலாம் வாங்க...! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு விருப்பமான பாதுஷாவை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது ருசியான பாதுஷாவை வீட்டிலேயே எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா - 2 கப்,
தயிர் - 1 கப்
நெய் - 4 தேக்கரண்டி
சமையல் சோடா - சிறிதளவு
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
முந்திரி அல்லது பாதாம் - 6

செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர், நெய், சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் கலந்து வைத்துள்ள தயிரைச் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடம் மாவை ஊற வைத்துக்கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையைச் சேர்த்து, இளஞ்சூட்டில் பாகு நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.

பின் அடுப்பை அணைத்து ஏலக்காய் பொடியை பாகுடன் சேர்க்கவும். பின் ஊறவைத்த மாவை சிறிது சிறிதாக எடுத்து உருட்டி ஓரளவுக்குத் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்தள்ள பாதுஷாக்களை எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாதுஷாக்களை பொரிய விடவும்.

பாதுஷாக்கள் பொன்னிறமாக மாறியவுடன், வெளியே எடுத்து 2-3 நிமிடங்களுக்கு ஆற வைத்து, அதை செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும்.

பின் அதனை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு அதன் மீது முந்திரி அல்லது பாதாமை தூவினால் ஸ்வீட் பாதுஷா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bathusa preparation in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal