உடலுக்கு சக்தி தரும் ஆவாரம் பூ வடி நீர்...!!
Avaram poo tea
தினமும் காலை டீ, காப்பி குடிப்பதற்கு பதிலாக மூலிகை வடிநீர் குடித்தால் உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு அரை - டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
ஏலக்காய் – 2
செய்முறை :
ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
சிறிது நேரம் கழித்து நிறம் மாறியதும் அதனை வடிக்கட்டி குடிக்கவும்.