வீட்டில் காய்கறியே இல்லையா? - இந்தக் குழம்பை செய்து பாருங்கள்.!!
appala kuzhambu receipe
வீட்டில் காய்கறிகள் இல்லாத சமையத்தில் அப்பளத்தை வைத்து குழம்பு வைப்பது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
புளி, சாம்பார் பொடி, அப்பளம், கடுகு, கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு.
செய்முறை:-
முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் வானலை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு போட்டு தாளித்து காய்ந்த மிளகாய் போட்டு அப்பளத்தை ஒன்றும் இரண்டுமாக உடைத்து போட்டு சாம்பார் பொடியை சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து விட்டு இறக்கினால் சுவையான அப்பளம் குழம்பு தயார்.