விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - பல்டி அடித்த வாலிபர் கோமாவுக்குச் சென்ற அவலம்.! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - பல்டி அடித்த வாலிபர் கோமாவுக்குச் சென்ற அவலம்.!

கடந்த 18-ம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வழிபாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாகக் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், அந்தப் பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞர் டிராக்டரின் முன்புறத்தில் ஏறி நின்று ஆடியபடியே சென்றார். 

அப்போது அவர், சாலையை நோக்கி திடீரென பல்டி அடித்த போது அவரது தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட மயங்கியுள்ளார். இதைப்பார்த்து, பதறிப்போன அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு 
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கிரண் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth went to coma stage for accident in andira


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->