பிரதமரின் வாகனத்தை வழி மறைத்த வாலிபர் - உ.பியில் பரபரப்பு.!
youth stop prime minister modi security in uttar pradesh
பிரதமரின் வாகனத்தை வழி மறைத்த வாலிபர் - உ.பியில் பரபரப்பு.!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி வாரணாசியின் ருத்ராக்ஷ் செண்டர் பகுதியில் வந்த போது, வாலிபர் ஒருவர் பிரதமர் பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே ஓடி வந்துள்ளார். உடனே அவரை பாதுகாப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

அதில் அவர் காசியாப்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஓடி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளதாவது, "பா.ஜ.க. கட்சியின் மூத்த உறுப்பினர் பரத் குமாரின் மகன், கிருஷ்ண குமார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க விரும்பியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
youth stop prime minister modi security in uttar pradesh