ஸ்பீக்கரில் சத்தம் குறைக்க முடியாதா ... ஆத்திரத்தில் இளைஞர் செய்த துணிகரம்..! - Seithipunal
Seithipunal


அதிகமாக ஸ்பீக்கரில் சத்தம் வைத்ததால் பக்கத்து வீட்டுக்காரரை வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர குமார் குமார் இவர் தனது வீட்டில் புதிதாக ஸ்பீக்கர் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை, அவர் வெளியில் வைத்து அதிக அளவில் சத்ததுடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுரேந்திர குமார் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சயத் அலி என்ற வாலிபர் சத்தம் அதிகமாக உள்ளது அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு சுரேந்திர குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். சுரேந்திர குமார் அதற்கு சத்தத்தை குறைக்க முடியாது என்று திமிராக பதில் சொல்லியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றவே சுரேந்திர குமாரை கடுமையாக தாக்கினார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுரேந்திர குமார் தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சயத் அலி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Murder His neighbour


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->