மாமியார் வீட்டுக்கு அரசு பேருந்தை எடுத்துச் சென்ற வாலிபர் - இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆத்மகுரு மண்டலத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரகையா. வாகன ஓட்டுநராக இருந்து வரும் இவர் நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், தரகையாவின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். 

இவரைக் காண்பதற்கு தாரகையைவிடம் போதிய பணவசதி இல்லை. அப்போது ஆத்மகுரு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்று தனியாக நின்றுள்ளது. இதைப்பார்த்த தரகையா ஊரிலுள்ள மனைவியை காண அந்த பேருந்தை ஓட்டி செல்ல முடிவு செய்து அதன் படி பேருந்தில் மாமியார் வீட்டுக்கு சென்றார்.

அந்த நேரத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பேருந்தை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், அரசு பேருந்தை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, தரகையாவை கைது செய்தனர். இதற்கிடையே, தாரகையாவுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் தெரிவிக்கின்றனர்.

டெப்போவில் இருந்து அரசு பேருந்து காணாமல் போயுள்ளது என்று அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்ததன் அடிப்படையில், சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். 

தரகையாவிடம் இருந்த அரசு பேருந்தை போலீசார் பறிமுல் செய்து டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தரகையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth driving andira govt bus for going to mother in law house


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->