கிரிக்கெட் போட்டியில் தகராறு: இளைஞர் பேட்டால் அடித்துக்கொலை..! போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


இளைஞர்கள் இருவருக்கு இடையில், கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பலந்தசாஹர் மாவட்டம் ரசோல்பூர் கிராமத்தில் இன்று காலை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது, ஓவரின் கடைசி பந்து வீசுவதில் நண்பர்களான விஜேஷ், சக்தி (வயது 18) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவருக்கிடையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜேஷ் கிரிக்கெட் பேட்டால் சக்தியின் தலையில் சரமாகியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சக்தியை மீட்ட சக இளைஞர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், பேட்டால் தாக்கியதில் படுகாயமடைந்த சக்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சக்தியை அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய விஜேசை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth beaten to death with a bat in a dispute over a cricket match


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->