உயிருக்கு அச்சறுத்தல்; மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு..!
Y plus security provided to the West Bengal Chief Electoral Officer
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிவடைந்த நிலையில், கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வாக்காளர்களின் இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு போன்ற பிற காரணங்களால், 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்னர்.
இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 15-ந் தேதி வரை, வாக்காளர் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான கோரிக்கைகள் பெறப்படவுள்ளன. அதன் பின்னர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த பணிகளை கவனித்து வரும் மேற்கு வங்காள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலின் உயிருக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் 12 வீரர்கள் அடங்கிய ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Y plus security provided to the West Bengal Chief Electoral Officer